Skip to main content

Posts

தினம் ஒரு கதை - நம் விதி - பாவ்லோ கொய்லோ - Daily Story - Destiny - Paulo Coelho

பெருந்தன்மைக்கும், நேர்மைக்கும் பெயர் போன சாமுராய் ஒருவர், ஜென் துறவியிடம் ஆலோசனை கேற்பதற்காக அவரை சந்திக்க சென்றார்.  துறவி தனது தியானத்தில் இருந்து விழித்ததும்,  சாமுராய் கேட்டார், நான் ஏன் என்னை மிகவும் தாழ்ந்தவனாக உணர்கிறேன்? நான் பல முறை மரணத்தை எதிர்கொண்டவன், பலவீனமானவர்களையும் பாதுகாத்துள்ளேன். ஆயினும் கூட, நீங்கள் தியானிப்பதைக் கண்டும், என் வாழ்க்கைக்கு முற்றிலும் எந்த முக்கியத்துவமும் இல்லை என்று உணர்கிறேன். - காத்திருங்கள். இன்று என்னைப் பார்க்க வரும் அனைவருடன் , எங்கள் சந்திப்பு முடிந்ததும், நான் தங்களுக்கு பதிலளிப்பேன். சாமுராய் நாள் முழுவதும் கோவில் தோட்டங்களில் உட்கார்ந்தும், மக்கள் ஆலோசனையைத் தேடி உள்ளேயும் வெளியேயும் செல்வதைப் பார்த்த வண்ணம் இருந்தார். அவர்கள் அனைவரையும் துறவி  பொறுமையுடனும், முகத்தில் ஒளிரும் அதே புன்னகையுடனும் ஒரே விதமாக அணுகியதை சாமுராய் கண்டார். இரவுப்பொழுதில், மக்கள் எல்லோரும் சென்றபோது, ​​சாமுராய் துறவியிடம் கோரினார்: - இப்போது தாங்கள் எனக்கு கற்பிக்க இயலுமா? துறவி, அவரை உள்ளே அழைத்து தனது இடத்திற்கு அழைத்துச் சென்றார். வானத்தில் முழ...

அன்புக்குரியவள் என் அத்தனை ப்ரியத்துக்குரியவள்

இவள் அழகி. சத்தமில்லாமல் வருவாள் தண்ணீர் குடித்து விட்டு சென்று விடுவாள். அப்போது யாராவது கோபித்துக் கொண்டாலும், சத்தம் போட்டாலும், அடிக்க வந்தாலும் எதுக்கும் பதில் பேசாமல் அமைதியாக நம் கண்களைப் பார்க்க ஆரம்பித்து விடுவாள். விழிகளைப் பார்த்த வண்ணம் இருப்பாள். எவ்வளவு கோபத்தோடு அனுகினாலும் அவளிடம் இருக்கும் ஜென் நிலையை நம்மிடையே செலுத்தி விட்டு செல்வாள். ஒரு நாள் அவசரமாக வீட்டிலிருந்து வெளியே செல்ல கெளம்பி கொண்டிருந்த சமயம் வழி விட மறுத்தாள். என் கண்களை நோக்கிய வண்ணம் இருந்ததால், என்ன வேண்டும் சாப்பிட ஏதாவது வேண்டுமா என்று பிஸ்கட் கொடுத்தேன், பிறகு வினவினேன். அதுக்கும் அதே பாவனை. வழி விட மறுத்ததால் கோவப்பட்டேன் அதுக்கும் அதே பாவனை. பிறகு என்னை மீறி சிரித்து விட்டேன். அடுத்த நாள் ஏன் இப்படிச் செய்தாய் என்னாயிற்று நேற்று என, நானும் பக்கத்து வீட்டு தோழி அர்ச்சினியும் இவளை பிளாக் செய்து பேச ஆரம்பித்தோம். தலை தெறிக்க ஓடிவிட்டாள். :)  இவளை கோபத்துடன் பார்ப்பது அரிது. கடந்த வருடம் கருவுற்றிருந்த நிலையில் எப்போதும் சற்று அச்சத்துடன் காணப்பட்டாள். பிள்ளைகள் பெற்றதும் எங்கே பிள்ளைகளை ...

Vaaname Ellai - Movie Review

வானமே எல்லை  - பாலச்சந்தர் 5  இளைஞர்கள் (3 ஆண்கள்,  2 பெண்கள்) வாழ்க்கையின் (குடும்பம், சமூகம்) மீது ஏற்படும் விரக்தி காரணமாக அந்த சூழ்நிலையை விட்டு விலக, வெறுக்க, தப்பிக்க தனியே வீட்டை விட்டு வருவார்கள், வருகின்ற சூழ்நிலைக்கு தள்ளப்படுவார்கள். ஒரு குறிப்பிட்ட நேரத்தில் 5 பெரும் ஒன்றாக சந்திக்க பிரச்சனை வேறே தவிர, ஆனால் அவர்களுக்கு இழைக்கப்பட்ட  துரோகம் ஒன்று தான் என்று தெரிய வரும் போது அவர்கள் சேர்ந்து ஒரு முடிவு எடுப்பார்கள்.. ஒரு குறிப்பிட்ட நாள் வரை நாம் அனைவரும் அவரவர் விருப்பம் போல் மகிழ்ச்சியாக இருப்போம் . பிறகு அனைவரும் தற்கொலை செய்து கொள்வோம் என முடிவு எடுப்பார்கள்.. அவர்கள் மரணத்திற்காக தேர்ந்தெடுத்த நாள் வரை மகிழ்ச்சியாக  ஆண், பெண் பாகுபாடின்றி நண்பர்களாக  அவரவருக்கு விருப்பமான விஷயங்களை சொல்லி அதை செயல்படுத்தி மகிழ்ச்சியாக இருப்பார்கள். நடுவில் ஒருவர் காணமால் போக என்ன நடந்தது, அவர்கள் எடுத்த முடிவு நிறைவேறியதா?  இல்லையா ? என படம் விறுவிறுப்பாக எதிர்பாக்காத இறுதி காட்சியை நோக்கி செல்லும் விதம் நன்று.   ஒரு சமூகம், குடும்பம் எப்ப...

எண் 54 பேருந்தும், நானும் (MTC Bus Driver with my Conversation)

'54'  பாரிஸ் இல் இருந்து பூந்தமல்லி  செல்லும் பேருந்தில் வழக்கம் போல் அலுவலுகம் சென்று மாலை பணி முடிந்து மறுபடி 54  பேருந்தில் வரும் போது பேருந்தில் நடந்த உரையாடல், அனுபவம் ..... எப்பொழுதும் கண்ணாடி கதவு போட்ட பேருந்தில் காலை சென்ட்ரல் சிக்னலில் கதவு திறந்து கூட்டம் ஏற்றி பிறகு சிறிது நேரம்  ஸ்டாண்ட் போட்டு பிறகு தான் வண்டி எடுப்பார்கள்.. ஆனால் பணி முடிந்து மாலை அதே சென்ட்ரல் சிக்னலில் வண்டி நிற்கும் போதும், fort ஸ்டேஷனலிலும் பெரும்பாலோர் கதவு திறக்கும் படி கேட்பார்கள், திட்டி  தீர்ப்பார்கள் ஆனாலும் கதவு திறக்க மாட்டார்கள்..  சில சமயம் கதவு திறப்பார்கள்.. அந்த மாதிரி சமயங்களில் கடைசியாக இறங்கும் போது ஏன், எதற்கு கதவு திறக்கவில்லை என பணிவாக ஓட்டுனரிடம் கேட்டுருக்கிறேன்.. ஆமாம் காலை திறக்கிறோம் மாலை இனிமேல் செய்கிறோம் என்றும், உனக்கெதுக்கு இந்த தேவை இல்லாத பேச்சு  என்கிற பேச்சும் வாங்கியிருக்கிறேன்.. அனால் இன்று சந்தித்த அனுபவம் சற்றே வித்தியாசமானது.     ஓட்டுநர் அன்பும், நடத்துனர் ஆறுமுகமும் எங்களது உரையாடலும் .... உரையாடல் (அ...

The Power of RTI (Right to Information act) - இதுதான் தகவல் பெறும் உரிமைச்சட்டம் - Kutram Kadithal Movie

குற்றம் கடிதல் திரைப்படம் - நல்ல படம் பார்த்த நிறைவு -  எல்லாரும் பாருங்க உங்களுக்கு பிடிக்கும். குற்றம் கடிதல்  திரைப்படம் - அடித்த ஆசிரியை, மயங்கிய சிறுவன் - தோழா அந்த ஆசிரியை மேல் போட்ட கேஸ் வாபஸ் வாங்கிக்கலாம்.  ஆனால் , ஆனால்  RTI file  பண்ணலாம் .. RTI  என்றால் என்ன ? RTI (right to information act)   -   RTI  தகவல் பெறும் உரிமைச்சட்டம் சிறப்பு பயிற்சி முகாம் 10 நாட்களுக்கு முன்பு சனிக்கிழமை அன்று 4 pm  to 7 pm சென்னை parrys கும்பத் காம்ப்ளெக்ஸ் இல் நடைபெற்றது , கட்டணம் ஏதும் இல்லை. நமக்கான உரிமையை எவ்வாறு எழுத்து வடிவம் மூலம் விண்ணப்பித்து அரசாங்கத்திடம் பெறவேண்டும் என்பதை அய்யா பாலசுப்ரமணியன் ( https://www.facebook.com/BalasubramaniE?fref=ts ) அவர்கள்  விரிவாக விளக்கியதோடு மட்டுமில்லாமல் விண்ணப்பம் எழுதவும் பயிற்சி அளித்தார். RTI சிறப்பு பயிற்சி முகாம் வரும் போது நோட்டுபுத்தகம், பேனா எடுத்துவரவும். என்று facebook பதிவில் சொல்லி இருந்தார்கள். சிறிது தாமதமாகிவிட்டது. 5pm மணி அளவில் தான்...

வெறுக்கதகும் நகை கடை விளம்பரங்கள் - Disgusting Jewelry Shop Advertisements

சமிப காலமாக நகை கடை விளம்பரங்களை அதிகமாக பார்க்க நேரிடுகிறது, எல்லா சேனல்களிலும் நகை கடை விளம்பரங்கள் என்றாலே உங்கள் பெண்களுக்கு நகை வாங்கி விட்டீர்களா இல்லையா ? கல்யாணமே நடக்காது என்பது போல் தான் இருக்கிறது .  விளம்பரம் 1   "மாப்பிள்ளையே அப்படியே வெயிட் பண்ண சொல்லுங்க இதோ வந்துடறேன், அதான் நம்ப கடை இருக்கே அதான் அதே தான் அந்த நகை கடை இருக்கே என்று"   விளம்பரம் 2  "பெண், பெண்கள் என்றாலே டென்ஷன் ல என்று ஆரம்பித்து .பெண்கள் டென்ஷன் இல்லை அவர்களுக்கு நகை சேர்ப்பதில் தான் டென்ஷன் என்று சொல்லி கவலை படாதீங்க, கல்யாண வயதில் பெண்கள் இருக்கா கவலை வேண்டாம். அந்த நகை கடையில் வட்டி இல்லை அது இல்லை இது இல்லை என்று சொல்றாங்க"   விளம்பரம் 3  "மற்றுமொரு விளம்பரம் ஒன்றில் அப்பா அம்மா அவர்களின் மகள் கோவிலுக்கு செல்வார்கள், உடனே மனைவி கணவரிடம் கூறுவார்கள் நம்ப பெண் யாரோ ஒரு பையன் கூட ஓடி போக போறா என்று, கணவர் கண்டு கொள்ளமாட்டார், மகள் கோவிலில் இருந்து வெளியே வந்தவுடன் காதலன் அழைப்பார் அந்த பெண் காதலனை முறைத்த படி பார்த்து அவர் தந்தையுடன் ...

Happy Happy Birthday to My Dear Thala

நலம் வாழ எந்நாளும் என் வாழ்த்துகள், பிரார்த்தனைகள் அஜித் சார் எனக்கு பிடித்த மனிதர் அஜித்குமார்  என் லுக், நடிப்பு மட்டும் பார்க்கமால் என் கேரக்டர் பிடித்து என்னை பிடிக்கும் என்று சொன்னால் அதில் அர்த்தம் இருக்கும் என்று சொன்ன அந்த கணம் அவரின் பேச்சு ஈர்த்தது .. ம்.. அதான் உண்மை .  அந்த நடிகரா ரொம்ப வெளிப்படையா பேசுவாரு, திமிர் பிடித்தவர் என்று ஒரு கால கட்டத்தில் பேசிய நபர்களும், பிரபலங்களும், பத்திரைகளும் இன்று அவரை தலையில் வைத்து கொண்டாடுகிறார்கள்... ஏன் ?  சிலர் அவரின் நல்ல குணங்களை கண்டு மாறி இருக்கலாம், அவரின் வெளிப்படையான பேச்சிலும், உள்ளொன்று வைத்து புறமொன்று பேசாதது, அவரின் உண்மையின் சக்தியை கண்டு வியந்து மாறி இருக்கலாம் . ஆனால் சிலரும், இவரை பிடிக்கும் என்று கூறுவது அவர்களை பிரபலமாக்கும் பணிகளுக்காகவே, சினி துறையில். அதுவும் வாரம் ஒரு முறை, மாதம் இருமுறை வெளி வரும் பத்திரிக்கைகளும், புத்தகங்களும் சமுகவலைதள பத்திரிக்கை, வலை பக்கங்களும் அஜித் என்ற பெயரை பயன்படுத்துவது பிரபலமாக்குவதர்காகவும், புகழ்ச்சிக்காகவும், நம்பிக்கைகாகவும்...

இதயம் இருந்தும் இல்லாமலும் நாம் - Heartful and Heartless, We

இதயம் இருந்தும் இல்லாமலும் நாம் இறைவன் கொடுத்ததை இருக்கும் போதும் (ரத்த தானம் ) இறந்த பிறகும் (கண் கடமை) இன்னொருவருக்கு கொடுப்பது நலமே கண் கடமை செய்வீர்  இருக்கும் போது கொடுப்பதே தானம் இறந்த பின் கொடுப்பது கடமை கண்களை கொடுப்பீர் கடமையை செய்வீர் பணம் போதும் விலை உள்ள பொருள்களை நேசிக்க மனம் வேண்டும் விலையில்லா உயிர்களை நேசிக்க நல்ல மனம் கொண்டுள்ள நண்பர்களுக்காக சக்தி எழுதிகொள்வது செய்த பிறகே சொல்கிறேன் கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்க் இல் விவரங்களை பூர்த்தி செய்து அனுப்பினால் கண் தானம் செய்ததற்கான கார்டு  அனுப்புவார்கள்.... http://www.sankaranethralaya.org/eye-pledge.html

Memorable Moment in My Life - Sakthi

கன்னிமரா நூலகத்தில் எப்போதும் கதை புத்தகம் தான் எடுப்பேன்  ஒரு  மாறுதலுக்கு அன்று   யாரோ படித்து வைத்த புத்தகத்தை எதர்ச்சியாக எடுத்து சென்றேன் "மீட்டாத வீணை - பாலகுமாரன், இனிது இனிது காதல் இனிது - பாலகுமாரன்"  வியந்து போனதும் பிரமித்து போனதும் சந்தோஷ பட்டதும் கண்ணீர் சிந்தியதும்  ரசித்ததும் ரசித்த எழுத்தை கற்பனை செய்ததும் இதை தவிர பிடித்திருகிறது என்ற வார்த்தைக்கு அர்த்தம் தெரிந்து கொண்ட நேரம் நான் புத்தகம் முடித்த தருணம்... இனி இது போல் தருணம் கிடைக்குமா என்று நினைத்து  பாலகுமாரன் ஐயா வினுடைய புத்தகங்கள் படிக்க ஆரம்பித்தேன் ஒவ்வொரு  புத்தகம் படித்தததும் அதே தருணம் தான்... மிகவும் மகிச்சியாய் இருக்கிறது... 

Ajith’s Special Interview For His Fans – Ananda Vikatan

கற்றுக் கொண்டால் குற்றமில்லை - தியானம் செய்யுங்கள்

தோழனே! தியானம் என்பது மந்திரமல்ல, ஒரு மதத்தின் கோட்பாடும் இல்லை. யாரோ பொழுது போகாதவர்களின் வேலையும் அல்ல. இது சும்மா இருத்தலின் ஆரம்ப நிலை. சும்மா இருத்தல் என்பது சோம்பி இருத்தல் அல்ல. எந்த செயலும் செய்யாது ஏதோ கற்பனையில் மூழ்கி இருத்தலும் அல்ல. ஒரு விஷயத்தை விருப்பு வெறுப்பின்றி பார்த்தலே சும்மா இருத்தல். இது துறவிகளுக்கான விஷயமல்லவா என்று கேள்வி வரும். எல்லோருக்கும் தேவைப்படும் நிலை அது. எவரெல்லாம் வெற்றி பெற விரும்புகிறாரோ, அவருக்கு உண்டான ஆதார சக்தி இது. எவரால் சும்மா இருக்க முடிகிறதோ, அதாவது எவரால் ஒரு விஷயத்தை விருப்பு வெறுப்பின்றி பார்க்க முடிகிறதோ, அவர் அந்த விஷயத்தை தெளிவாக புரிந்து கொள்ள முடியும். ‘தியானம் பண்ணா பக்கத்து வீட்டு விஷயம் பளிச்சுன்னு சினிமா மாதிரி தெரியுமா?’ பேராசை இது. விருப்பு தலை விரித்தாடும் புத்தி இது. அடுத்த வீட்டை ஏன் பார்க்க வேண்டும் என்கிற கேள்வி தனக்குள் இல்லாத ஆவல் இது, உன் வீட்டை பார். உன்னை உற்றுப்பார், உன்னிலிருந்து துவங்கு. தன்னையே விருப்பு வெறுப்பின்றி பார்ப்பவருக்கு அடுத்த வீடு பற்றி அதிக அக்கறை இல்லாது போகும். அங்கே யார் என்ன பேசுகின்றார்...