Skip to main content

Posts

Showing posts from October, 2018

அன்புக்குரியவள் என் அத்தனை ப்ரியத்துக்குரியவள்

இவள் அழகி. சத்தமில்லாமல் வருவாள் தண்ணீர் குடித்து விட்டு சென்று விடுவாள். அப்போது யாராவது கோபித்துக் கொண்டாலும், சத்தம் போட்டாலும், அடிக்க வந்தாலும் எதுக்கும் பதில் பேசாமல் அமைதியாக நம் கண்களைப் பார்க்க ஆரம்பித்து விடுவாள். விழிகளைப் பார்த்த வண்ணம் இருப்பாள். எவ்வளவு கோபத்தோடு அனுகினாலும் அவளிடம் இருக்கும் ஜென் நிலையை நம்மிடையே செலுத்தி விட்டு செல்வாள். ஒரு நாள் அவசரமாக வீட்டிலிருந்து வெளியே செல்ல கெளம்பி கொண்டிருந்த சமயம் வழி விட மறுத்தாள். என் கண்களை நோக்கிய வண்ணம் இருந்ததால், என்ன வேண்டும் சாப்பிட ஏதாவது வேண்டுமா என்று பிஸ்கட் கொடுத்தேன், பிறகு வினவினேன். அதுக்கும் அதே பாவனை. வழி விட மறுத்ததால் கோவப்பட்டேன் அதுக்கும் அதே பாவனை. பிறகு என்னை மீறி சிரித்து விட்டேன். அடுத்த நாள் ஏன் இப்படிச் செய்தாய் என்னாயிற்று நேற்று என, நானும் பக்கத்து வீட்டு தோழி அர்ச்சினியும் இவளை பிளாக் செய்து பேச ஆரம்பித்தோம். தலை தெறிக்க ஓடிவிட்டாள். :)  இவளை கோபத்துடன் பார்ப்பது அரிது. கடந்த வருடம் கருவுற்றிருந்த நிலையில் எப்போதும் சற்று அச்சத்துடன் காணப்பட்டாள். பிள்ளைகள் பெற்றதும் எங்கே பிள்ளைகளை ஏதாவ