Skip to main content

அன்புக்குரியவள் என் அத்தனை ப்ரியத்துக்குரியவள்

இவள் அழகி. சத்தமில்லாமல் வருவாள் தண்ணீர் குடித்து விட்டு சென்று விடுவாள். அப்போது யாராவது கோபித்துக் கொண்டாலும், சத்தம் போட்டாலும், அடிக்க வந்தாலும் எதுக்கும் பதில் பேசாமல் அமைதியாக நம் கண்களைப் பார்க்க ஆரம்பித்து விடுவாள். விழிகளைப் பார்த்த வண்ணம் இருப்பாள். எவ்வளவு கோபத்தோடு அனுகினாலும் அவளிடம் இருக்கும் ஜென் நிலையை நம்மிடையே செலுத்தி விட்டு செல்வாள். ஒரு நாள் அவசரமாக வீட்டிலிருந்து வெளியே செல்ல கெளம்பி கொண்டிருந்த சமயம் வழி விட மறுத்தாள். என் கண்களை நோக்கிய வண்ணம் இருந்ததால், என்ன வேண்டும் சாப்பிட ஏதாவது வேண்டுமா என்று பிஸ்கட் கொடுத்தேன், பிறகு வினவினேன். அதுக்கும் அதே பாவனை. வழி விட மறுத்ததால் கோவப்பட்டேன் அதுக்கும் அதே பாவனை. பிறகு என்னை மீறி சிரித்து விட்டேன். அடுத்த நாள் ஏன் இப்படிச் செய்தாய் என்னாயிற்று நேற்று என, நானும் பக்கத்து வீட்டு தோழி அர்ச்சினியும் இவளை பிளாக் செய்து பேச ஆரம்பித்தோம். தலை தெறிக்க ஓடிவிட்டாள். :) 



இவளை கோபத்துடன் பார்ப்பது அரிது. கடந்த வருடம் கருவுற்றிருந்த நிலையில் எப்போதும் சற்று அச்சத்துடன் காணப்பட்டாள். பிள்ளைகள் பெற்றதும் எங்கே பிள்ளைகளை ஏதாவது செய்துட போறங்கனு சற்றுக் கோபப்பட்டுப் பாத்துருக்கிறேன். பிள்ளைப்பேறு முடிந்ததும் சோர்வடைந்து விட்டாள். பக்கத்து வீட்டில் இருப்பவர் பிள்ளைகள் அழகா இருப்பதைப் பார்த்து ஆசையாகத் தூக்கி இருக்கிறார். எங்கே ஏதாவது செய்துடப்போறாங்க என்று அவரைக் கொஞ்சம் கடித்து விட்டாள். தாயுள்ளம் பதறிவிட்டது. 

பிள்ளைகளில் சிலர் பிறந்த கொஞ்ச நாட்களில் இறந்துவிட்டனர். மீதமிருந்தது நால்வர். அதில் ஒருவர் லாரியில் சிக்கி இறந்துவிட்டார். மீதமிருக்கும் மூவரில் இவள் குணத்தைத் தாங்கி ஒருவர் கூட இல்லையா என யோசித்ததுண்டு. வளர்ந்ததும் இருவர் இடம் பெயர்ந்து விட்டனர். மீதமிருக்கும் ஒருவள் இவளை போன்றே கண்களைக் கொண்டிருந்தாள். குறும்புக்காரி. லாரியில் சிக்கி கால் ஒடித்துக் கொண்டு வந்தாள். பயங்கரத் திட்டு எங்களிடத்தில். பிறகு சற்று சரியானதும் அவளும் இடம் பெயர்ந்து விட்டாள். இத்தனை பிள்ளை பெற்றும் என்ன, ஒருவர் கூட இல்லை இவளிடத்தில் என்பது வருத்தமடையச் செய்தது. இவள் தனியே இல்லை இவள் தோழர்கள் இருவர் இருப்பர். அவ்விருவரில் ஒருவளின் கண்கள் அழகாக இருக்கும். இன்னொருவளின் கூந்தல் ஸ்டைல் ஆகா இருக்கும், நடக்கும் போதே அழகாக இருக்கும். ஆனால் இவங்கல்லாம் பார்க்க தான் அழகு. எந்த நேரமும் சத்தம் போட்டபடி இருப்பார்கள். தெரு வம்பு பிடிப்பவர்கள். தினமும் நம்மைப் பார்ப்பவர்கள் தான். ஆனால் முன்பின் தெரியாத மாதிரி என்னைப் பார்த்தவுடன் சத்தம் போட ஆரம்பித்து விடுவார்கள். என்னவள் மட்டும் தான் தேவையில்லாமல் யாரையும் பார்த்துச் சத்தம் போடமாட்டாள். ஆனால் மற்ற தெருக்களில் இருக்கும் இவளின் சகாக்கள் சேர்ந்தாப்போல் சத்தம் கொடுத்தால் போய்ச் சேர்ந்து கொள்வாள். அன்பால் நிறைந்தவள். யார் அழகானவர்கள் உள்ளத்தில் இருந்து பார்க்கணும் அழகை. அது புறத்தில் தெரியும். என்னவள் அழகானவள். இந்தச் சமூகம் திணித்த அத்தனை கடமையும் ஒரு பெண்ணாகச் செய்து முடித்து விட்டு இன்று சூரியன் சைட் அடித்துக்கொண்டிருக்கிறான் என்றும் அறியாமல் உறங்கிக்கொண்டிருக்குகிறாள். கண்ணுறங்கு செல்லமே ! சற்று நேரத்தில் வாகனங்களின் இரைச்சல்களிலும், மனிதர்களின் சப்தங்களிலும் கதிரவனின் உக்கிரத்திலும் உன் உறக்கம் களைய போவது உறுதி. அதுவரை கண்ணுறங்கு செல்லமே ! 


நீண்ட நாள் பிறகு சந்தித்ததில் மிக்க மகிழ்ச்சி். ஆனால் உறக்கத்தில் இருந்தாள். உயிர்ப்புடன் செயல்பட வைக்கும் உன் கண்களைப் பார்க்க முடியவில்லையே செல்லம் !!!

கடந்த புதன் அன்று சந்திப்பில் :)

Comments

Popular posts from this blog

The Power of RTI (Right to Information act) - இதுதான் தகவல் பெறும் உரிமைச்சட்டம் - Kutram Kadithal Movie

குற்றம் கடிதல் திரைப்படம் - நல்ல படம் பார்த்த நிறைவு -  எல்லாரும் பாருங்க உங்களுக்கு பிடிக்கும். குற்றம் கடிதல்  திரைப்படம் - அடித்த ஆசிரியை, மயங்கிய சிறுவன் - தோழா அந்த ஆசிரியை மேல் போட்ட கேஸ் வாபஸ் வாங்கிக்கலாம்.  ஆனால் , ஆனால்  RTI file  பண்ணலாம் .. RTI  என்றால் என்ன ? RTI (right to information act)   -   RTI  தகவல் பெறும் உரிமைச்சட்டம் சிறப்பு பயிற்சி முகாம் 10 நாட்களுக்கு முன்பு சனிக்கிழமை அன்று 4 pm  to 7 pm சென்னை parrys கும்பத் காம்ப்ளெக்ஸ் இல் நடைபெற்றது , கட்டணம் ஏதும் இல்லை. நமக்கான உரிமையை எவ்வாறு எழுத்து வடிவம் மூலம் விண்ணப்பித்து அரசாங்கத்திடம் பெறவேண்டும் என்பதை அய்யா பாலசுப்ரமணியன் ( https://www.facebook.com/BalasubramaniE?fref=ts ) அவர்கள்  விரிவாக விளக்கியதோடு மட்டுமில்லாமல் விண்ணப்பம் எழுதவும் பயிற்சி அளித்தார். RTI சிறப்பு பயிற்சி முகாம் வரும் போது நோட்டுபுத்தகம், பேனா எடுத்துவரவும். என்று facebook பதிவில் சொல்லி இருந்தார்கள். சிறிது தாமதமாகிவிட்டது. 5pm மணி அளவில் தான் செல்ல நேர்ந்தது. காலதாமதமாக சென்றதால் முதல் 5 நிமிடங்கள் வக்கீல் துற

வெறுக்கதகும் நகை கடை விளம்பரங்கள் - Disgusting Jewelry Shop Advertisements

சமிப காலமாக நகை கடை விளம்பரங்களை அதிகமாக பார்க்க நேரிடுகிறது, எல்லா சேனல்களிலும் நகை கடை விளம்பரங்கள் என்றாலே உங்கள் பெண்களுக்கு நகை வாங்கி விட்டீர்களா இல்லையா ? கல்யாணமே நடக்காது என்பது போல் தான் இருக்கிறது .  விளம்பரம் 1   "மாப்பிள்ளையே அப்படியே வெயிட் பண்ண சொல்லுங்க இதோ வந்துடறேன், அதான் நம்ப கடை இருக்கே அதான் அதே தான் அந்த நகை கடை இருக்கே என்று"   விளம்பரம் 2  "பெண், பெண்கள் என்றாலே டென்ஷன் ல என்று ஆரம்பித்து .பெண்கள் டென்ஷன் இல்லை அவர்களுக்கு நகை சேர்ப்பதில் தான் டென்ஷன் என்று சொல்லி கவலை படாதீங்க, கல்யாண வயதில் பெண்கள் இருக்கா கவலை வேண்டாம். அந்த நகை கடையில் வட்டி இல்லை அது இல்லை இது இல்லை என்று சொல்றாங்க"   விளம்பரம் 3  "மற்றுமொரு விளம்பரம் ஒன்றில் அப்பா அம்மா அவர்களின் மகள் கோவிலுக்கு செல்வார்கள், உடனே மனைவி கணவரிடம் கூறுவார்கள் நம்ப பெண் யாரோ ஒரு பையன் கூட ஓடி போக போறா என்று, கணவர் கண்டு கொள்ளமாட்டார், மகள் கோவிலில் இருந்து வெளியே வந்தவுடன் காதலன் அழைப்பார் அந்த பெண் காதலனை முறைத்த படி பார்த்து அவர் தந்தையுடன் சென்று விடுவார். உட