வானமே எல்லை - பாலச்சந்தர்
5 இளைஞர்கள் (3 ஆண்கள், 2 பெண்கள்) வாழ்க்கையின் (குடும்பம், சமூகம்) மீது ஏற்படும் விரக்தி காரணமாக அந்த சூழ்நிலையை விட்டு விலக, வெறுக்க, தப்பிக்க தனியே வீட்டை விட்டு வருவார்கள், வருகின்ற சூழ்நிலைக்கு தள்ளப்படுவார்கள். ஒரு குறிப்பிட்ட நேரத்தில் 5 பெரும் ஒன்றாக சந்திக்க பிரச்சனை வேறே தவிர, ஆனால் அவர்களுக்கு இழைக்கப்பட்ட துரோகம் ஒன்று தான் என்று தெரிய வரும் போது அவர்கள் சேர்ந்து ஒரு முடிவு எடுப்பார்கள்.. ஒரு குறிப்பிட்ட நாள் வரை நாம் அனைவரும் அவரவர் விருப்பம் போல் மகிழ்ச்சியாக இருப்போம் . பிறகு அனைவரும் தற்கொலை செய்து கொள்வோம் என முடிவு எடுப்பார்கள்.. அவர்கள் மரணத்திற்காக தேர்ந்தெடுத்த நாள் வரை மகிழ்ச்சியாக ஆண், பெண் பாகுபாடின்றி நண்பர்களாக அவரவருக்கு விருப்பமான விஷயங்களை சொல்லி அதை செயல்படுத்தி மகிழ்ச்சியாக இருப்பார்கள். நடுவில் ஒருவர் காணமால் போக என்ன நடந்தது, அவர்கள் எடுத்த முடிவு நிறைவேறியதா? இல்லையா ? என படம் விறுவிறுப்பாக எதிர்பாக்காத இறுதி காட்சியை நோக்கி செல்லும் விதம் நன்று. ஒரு சமூகம், குடும்பம் எப்படி தன்னுடைய இளைஞர் சமுதாயதின் மீது விரக்தி, வெறுப்பை உண்டாக்குகிறது அதிலிருந்து அவர்கள் எடுக்கும் முடிவு, திருப்புமுனை என்று படத்தில் வரும் காட்சிகள், வசனங்கள் அருமை. ஒரு சமூகத்தால் குடும்பத்தால் இழைக்கப்படும் அவமானம் , துரோகம் அதனால் என்ன என்ன நடக்கிறது என்பதை எதார்த்தமாக ஆண், பெண் நட்பை அழகோடு சரிசமமாக காண்பித்து இருக்கிறார் இயக்குனர். 5 கேரக்டர் இல் எதோ ஒருவரின் பிரச்சனையோ கேரக்டர் ஓ நம்மை பிரதிபலிப்பது போல் இருக்கும். இன்றைக்கு இருக்கும் சமகால பிரச்னையோடு தொடர்போடு இருப்பது தான் இத்திரைப்படத்தின் சிறப்பு.. பார்க்காதவர்கள் தவறாமல் பாருங்கள்.
நடிகர்கள்
ஆனந்த் பாபு
கெளதம் சுந்தராஜன்
பப்லு பிரித்விராஜ்
ரம்யா கிருஷ்ணன்
மது பாலா
ராஜேஷ்
விஷாலி கண்ணதாசன்
பானுப்ரியா

Comments
Post a Comment