பெருந்தன்மைக்கும், நேர்மைக்கும் பெயர் போன சாமுராய் ஒருவர், ஜென் துறவியிடம் ஆலோசனை கேற்பதற்காக அவரை சந்திக்க சென்றார்.
துறவி தனது தியானத்தில் இருந்து விழித்ததும்,
சாமுராய் கேட்டார்,
நான் ஏன் என்னை மிகவும் தாழ்ந்தவனாக உணர்கிறேன்? நான் பல முறை மரணத்தை எதிர்கொண்டவன், பலவீனமானவர்களையும் பாதுகாத்துள்ளேன்.
ஆயினும் கூட, நீங்கள் தியானிப்பதைக் கண்டும், என் வாழ்க்கைக்கு முற்றிலும் எந்த முக்கியத்துவமும் இல்லை என்று உணர்கிறேன்.
- காத்திருங்கள். இன்று என்னைப் பார்க்க வரும் அனைவருடன் , எங்கள் சந்திப்பு முடிந்ததும், நான் தங்களுக்கு பதிலளிப்பேன்.
சாமுராய் நாள் முழுவதும் கோவில் தோட்டங்களில் உட்கார்ந்தும், மக்கள் ஆலோசனையைத் தேடி உள்ளேயும் வெளியேயும் செல்வதைப் பார்த்த வண்ணம் இருந்தார். அவர்கள் அனைவரையும் துறவி பொறுமையுடனும், முகத்தில் ஒளிரும் அதே புன்னகையுடனும் ஒரே விதமாக அணுகியதை சாமுராய் கண்டார்.
இரவுப்பொழுதில், மக்கள் எல்லோரும் சென்றபோது, சாமுராய் துறவியிடம் கோரினார்:
- இப்போது தாங்கள் எனக்கு கற்பிக்க இயலுமா?
துறவி, அவரை உள்ளே அழைத்து தனது இடத்திற்கு அழைத்துச் சென்றார். வானத்தில் முழு நிலவு பிரகாசித்து கொண்டிருந்தது, சுற்றுப்புறம் ஆழ்ந்த அமைதியுடன் சலனமற்று இருந்தது.
நீங்கள் நிலவை பார்த்தீர்களா, எவ்வளவு அழகாக இருக்கிறதல்லவா? இந்நிலவு முழு பிரபஞ்சத்தையும் கடக்கும், நாளை சூரியன் மீண்டும் உதிக்கும்.
"ஆனால் சூரிய ஒளி மிகவும் பிரகாசமானது, மேலும் சூரிய ஒளியால் நம்மைச் சுற்றியுள்ள நிலப்பரப்பின் விவரங்களைக் காட்ட முடியும்: மரங்கள், மலைகள், மேகங்கள்.
"நான் இவ்விருவர் பற்றியும் பல ஆண்டுகளாக சிந்தித்துள்ளேன், நிலவு சொல்லி நான் கேள்விப்பட்டதே இல்லை, நான் ஏன் சூரியனைப் போல பிரகாசிக்கவில்லை? என : ஒருவேளை நான் தாழ்ந்தவன் என்பதாலோ? - நிச்சயமாக இல்லை ! என சாமுராய் பதிலளித்தார்.
நிலவும், சூரியனும் வெவ்வேறானவை, ஒவ்வொன்றும் அதற்கே உரிய சொந்த அழகைக் கொண்டுள்ளன. இரண்டையும் ஒன்றோடொன்று நீங்கள் ஒப்பிட முடியாது.
- எனவே தங்களுக்கு பதில் தெரியும்.
நாம் இருவரும் இரண்டு வெவ்வேறு நபர்கள், மேலும் இவ்வுலகை ஒரு மேம்பட்ட இடமாக மாற்ற அவரவர் நம்பிக்கையின் வழியில் போராடிக்கொண்டிருக்கிறோம், போராடிக்கொண்டே இருப்போம் இவ்வுலகம் மேம்பட்ட இடமாகும் வரை.
Tamil Translation: Sakthi
Comments
Post a Comment