Skip to main content

Posts

Showing posts from 2017

எண் 54 பேருந்தும், நானும் (MTC Bus Driver with my Conversation)

'54'  பாரிஸ் இல் இருந்து பூந்தமல்லி  செல்லும் பேருந்தில் வழக்கம் போல் அலுவலுகம் சென்று மாலை பணி முடிந்து மறுபடி 54  பேருந்தில் வரும் போது பேருந்தில் நடந்த உரையாடல், அனுபவம் ..... எப்பொழுதும் கண்ணாடி கதவு போட்ட பேருந்தில் காலை சென்ட்ரல் சிக்னலில் கதவு திறந்து கூட்டம் ஏற்றி பிறகு சிறிது நேரம்  ஸ்டாண்ட் போட்டு பிறகு தான் வண்டி எடுப்பார்கள்.. ஆனால் பணி முடிந்து மாலை அதே சென்ட்ரல் சிக்னலில் வண்டி நிற்கும் போதும், fort ஸ்டேஷனலிலும் பெரும்பாலோர் கதவு திறக்கும் படி கேட்பார்கள், திட்டி  தீர்ப்பார்கள் ஆனாலும் கதவு திறக்க மாட்டார்கள்..  சில சமயம் கதவு திறப்பார்கள்.. அந்த மாதிரி சமயங்களில் கடைசியாக இறங்கும் போது ஏன், எதற்கு கதவு திறக்கவில்லை என பணிவாக ஓட்டுனரிடம் கேட்டுருக்கிறேன்.. ஆமாம் காலை திறக்கிறோம் மாலை இனிமேல் செய்கிறோம் என்றும், உனக்கெதுக்கு இந்த தேவை இல்லாத பேச்சு  என்கிற பேச்சும் வாங்கியிருக்கிறேன்.. அனால் இன்று சந்தித்த அனுபவம் சற்றே வித்தியாசமானது.     ஓட்டுநர் அன்பும், நடத்துனர் ஆறுமுகமும் எங்களது உரையாடலும் .... உரையாடல் (அன்பு, ஆறுமுகம், சக்தி ). Driver Anbu