'54' பாரிஸ் இல் இருந்து பூந்தமல்லி செல்லும் பேருந்தில் வழக்கம் போல் அலுவலுகம் சென்று மாலை பணி முடிந்து மறுபடி 54 பேருந்தில் வரும் போது பேருந்தில் நடந்த உரையாடல், அனுபவம் .....
எப்பொழுதும் கண்ணாடி கதவு போட்ட பேருந்தில் காலை சென்ட்ரல் சிக்னலில் கதவு திறந்து கூட்டம் ஏற்றி பிறகு சிறிது நேரம் ஸ்டாண்ட் போட்டு பிறகு தான் வண்டி எடுப்பார்கள்..
ஆனால் பணி முடிந்து மாலை அதே சென்ட்ரல் சிக்னலில் வண்டி நிற்கும் போதும், fort ஸ்டேஷனலிலும் பெரும்பாலோர் கதவு திறக்கும் படி கேட்பார்கள், திட்டி தீர்ப்பார்கள் ஆனாலும் கதவு திறக்க மாட்டார்கள்.. சில சமயம் கதவு திறப்பார்கள்..
அந்த மாதிரி சமயங்களில் கடைசியாக இறங்கும் போது ஏன், எதற்கு கதவு திறக்கவில்லை என பணிவாக ஓட்டுனரிடம் கேட்டுருக்கிறேன்.. ஆமாம் காலை திறக்கிறோம் மாலை இனிமேல் செய்கிறோம் என்றும், உனக்கெதுக்கு இந்த தேவை இல்லாத பேச்சு என்கிற பேச்சும் வாங்கியிருக்கிறேன்..
அனால் இன்று சந்தித்த அனுபவம் சற்றே வித்தியாசமானது.
ஓட்டுநர் அன்பும், நடத்துனர் ஆறுமுகமும் எங்களது உரையாடலும் ....
உரையாடல் (அன்பு, ஆறுமுகம், சக்தி ).
Driver Anbu & Conductor Aarumugam |
சென்ட்ரல் சிக்னலில் மாலை பேருந்து வழக்கம் போல் நின்றது.. சிலர் கேட்டனர் கதவை திறக்கும் படி , கதவு திறக்கப்படவில்லை ..கடைசியாக இறங்கிய போது நான் மறுபடியும் ஏறி ஓட்டுனரிடம் (அன்பு ) பேச ஆரம்பித்தேன்..இதே சிக்னலில் காலை நீங்களாகவே நிறுத்தி கதவு திறந்து ஆள் ஏற்றுகிறீர்கள்.. ஆனா மாலை அதே பப்ளிக் (மக்கள்) திறக்க சொன்ன ஏன் திறக்க மாட்டேங்கிறீங்க ..
அன்பு: வாஸ்தவமான கேள்வி தான் மா ..ஆனால் இதுக்கு நிறைய காரணம் இருக்கு.. (அருகில் நடத்துனரும் இருந்தார்)
கதவு திறந்து திறந்து மூடுவதால் கதவில் பிரச்சனை வருகிறது.. கதவு மட்டும் மாற்ற 10 லட்சம் ஆகும்.. எந்த பேருந்துக்கும் இன்சூரன்ஸ் இல்லை.. சரி அதை மீறி கதவு திறந்து நாம் செல்லும் போது படியில் நிற்பவர்களிடம் பாதுகாப்பை உறுதி செய்ய முடியவில்லை..
அப்படி ஒரு சமயம் பேருந்து கதவு திறந்து இருந்த போது கதவிற்கு நேராக அமர்ந்திருந்த பயணி ஒருவர் பேருந்து திருப்பம் (turning) செய்யும் போது இருக்கையில் இருந்த கம்பி உடைந்து பேருந்து வெளியே விழுந்து விட்டார்..
எனக்கு AE மேலாதிகாரியிடமிருந்து அலைபேசி அழைப்பு வந்தது.. இந்த மாதிரி விபத்து பண்ணிட்டியாமே என்றார்.. நான் ஆமாம் சார் .. வழக்கமாக எடுக்கும் திருப்பம் தான் .. ஆனால் இருக்கையில் உள்ள கம்பி உடைந்ததால் ஏற்பட்டது , அவரை மருத்துவமனையில் சேர்த்து விட்டு தான் வருகிறேன் என்றேன்.. ஒரு கேள்வி.. கதவு வைத்த பேருந்தா இல்லையா ? .. கதவு வைத்தது தான் என்றேன் .. அப்போ கதவை திறந்து வைத்தது உன் தவறு என்று கூறி உனக்கு 'S' என்றேன்..
சக்தி: 'S' என்றால் ?
அன்பு: 'S' என்றால் உனக்கு நாளை சஸ்பெண்ட் என்று அர்த்தம்.. சில சமயங்களில் 1,10 ,30 நாள் வரை
எனக்கு 'CL' டியூட்டி.. ஒரு நாள் சம்பளம் 265 .. எனக்கு சம்பளம் மட்டும் போகாது இன்க்ரீமெண்ட் அது இது என எல்லாவற்றிலையும் கை வைப்பார்கள்..
அட்மிட் செய்தேனல்லவா அவரை டாக்டர் பேருந்து விபத்து என்று காவல்துறைக்கு இன்பார்ம் செய்து இருக்கிறார்கள்.. போலீஸ் வந்து அட்மிட் ஆனவரிடம் நீங்க கேஸ் கொடுங்க 10 ,15 லட்சம் வரை தேறும், என்று கூறி அவரை கேஸ் கொடுக்க சொன்னார்கள்..
அவரோ, நான் தினமும் வருகிற பேருந்து தான் இன்றைக்கு இருக்கை பிரச்சனையால் தான் நான் கீழே விழுந்தேன்.. மத்தபடி தினமும் என்ன நல்லபடியா தான் கூட்டிட்டு வராங்க என்று சொல்லிட்டு போய்ட்டாரு.. அவர் மட்டும் கேஸ் போட்டு இருந்தார் என்றால் எனக்கு வேலை போகியிருக்கும்..
அவருடைய மனிதாபிமானம் தான் என்னை காப்பாத்துச்சு ..
ஒரு நாளைக்கு எத்தனையோ பேர் எங்களை திட்றாங்க .. வேகமா போ, கதவை திற, அது இது என கேவலமா பேசுறாங்க.. அதுலாம் காதுல வாங்கிட்டா வண்டி ஓட்ட முடியாது..
நாங்க காலை 2 மணிக்கு எழுந்து காபி குடித்து ரெடி ஆகி 4 மணிக்கு டியூட்டி கு வந்துடுறோம், அப்பவே கண் சொக்கும் இருந்தாலும் விழிப்புணர்வோடு வண்டி ஓட்டுறோம்.. யாரும் வேணும் என்று விபத்து செய்வதில்லை
ஒரு நாய் குறுக்க வந்தாலே அனிச்சையா கை, கால், பிரேக்கில் கை போய்டும்.. எல்லாத்தையும் மீறி சூழ்நிலையும் ஒரு காரணமாவுது..
சரி இந்த மாதிரி காரணத்துக்கெல்லாம் இன்க்ரீமெண்ட், சஸ்பெண்ட் பண்ணுறாங்க என்றால் பிரச்சனை அது மட்டுமில்லை .. எங்களுக்கு சம்மந்தமில்லாத பிரச்சனைகளிலும் எங்களை இழுத்து விட்டு இன்க்ரீமெண்ட் இல் கை வைப்பார்கள்..
ஆறுமுகம்: (நடத்துனர்): எங்க உயிரை புழியுறாங்க..நடப்பதெல்லாம் அப்படி தான் இருக்கு என்று முதலும் கடைசியுமாக சொல்லி முடித்தார் ..
அன்பு: நீங்க பேருந்து நிலையத்தில் அங்கே அங்கே டிக்கெட் செக்கர் பாப்பிங்க..அவங்க வேலை டிக்கெட் சரி பார்ப்பது மட்டுமில்லை .. எத்தனை மணிக்கு வண்டி எடுக்கிறோம் எத்தனை மணிக்கு அவர்கள் இருக்கும் அந்த பேருந்து தடத்தை கடக்கிறோம் .. கதவு திறந்தே பேருந்து வருவதை அவர்கள் கவனித்தால் உடனே ரிப்போர்ட் செய்துடுவாங்க.. எனக்கு உடனே கால் வரும் நாளை உனக்கு 'S' என்று பதில் பேசாம சரி என்று சொல்வதை தவிர ஏதும் இல்லை...
நாம் எதோ கரிசனம் காட்டி கதவை திறப்பதில் மட்டும் 'S' கிடைப்பதில்லை..
ஒரு நாள் கோவளம் செல்லும் ரூட்லயிருந்து பேருந்தில் ரிட்டர்ன் வருகிற வழியில் பேருந்தில் ஆயில் லீக் ஆகி கொண்டிருந்தது.. பேருந்தில் எல்லாரையும் வேற பேருந்தில் எற சொல்லிவிட்டு மேலதிகாரிக்கு கால் செய்தேன் .. ஆயில் லீக் பிரச்சனை.. நான் நடத்துனரை அனுப்பி வைக்கிறேன்.. அவருடையனே டீசல் மட்டும் மெக்கானிக்கை அனுப்பி வையுங்கள் என்றேன் ..
மேலதிகாரி: ஆயில் தானே பிரச்சனை அப்படியே வந்துடுங்க என்றார் .
அன்பு: ஆயில் லீக் பிரச்சனை சார், அப்படியே வண்டி ஓட்டினால் என்ஜின் பழுது ஆகிவிடும் என்றேன்..
அவர் நீ அதெல்லாம் பார்க்காதே நான் சொன்னதை செய் அப்படியே வா என்றார் .. நானும் வந்து விட்டேன் .. அடுத்த நாள் பேருந்தில் என்ஜின் பழுதாகி விட்டது..
யார் ஓட்டுநர் என A .E (எனது மேலதிகாரிக்கும் மேலதிகாரி ).அழைத்தார்..
A .E மேலதிகாரி : ஏய் நீ தான் ஒட்டினியா ?
அன்பு: ஆமாய்யா.. ஏன்யா? பிரச்சனை னு தெரிந்தும் ஒட்டின? என்று திட்டும் கோர்வையில் பேசினார்.. மேலதிகாரி கிட்ட இன்பார்ம் செய்தேன்.. அதும் என்ஜின் பழுது ஆகும் என்றும் கூறினேன்... அவர் தான் அதெல்லாம் நாங்க பாத்துகிறோம் நீ வா என்றார்.. உடனே அந்த அதிகாரியை A .E அழைத்து கேட்டார் ஏன் சார் அப்படி சொன்னிங்க என்று A .E கேட்டார் .. அதற்கு அந்த அதிகாரி நான் அப்படி ஏதும் சொல்லவே இல்லையே என்று என் முன்னரே மாத்தி பேசிட்டாரு..
என் மொபைலில் பேசும் எல்லா காலும் ரெகார்ட் ஆகிற மாதிரி ஆப் இருக்கிறது .. அதில் எங்கள் உரையாடல் ரெகார்ட் ஆகி இருந்தது ... அதை உடனே A .E அதிகாரிக்கும் அந்த அதிகாரிக்கும் முன் போட்டு காமித்தேன்.. A .E கேட்டு முடித்ததும் "என்னை சார் நீங்க உங்க வேலையை தொடருங்க .. நான் பாத்துக்கிறேன் என்று கூறினார்.."
ஆதாரம் மட்டும் இல்லை என்றால் என் வேலை போயிருப்பது நிச்சயம்.. அதுவும் தவறு என் மீது இல்லை என்றதும் அவர் அப்போது தான் என்னை மரியாதையாக அழைத்தார்..
ஒரு நாளைக்கு எத்தனை பிரச்சனை தெரிந்தவன், தெரியாதவன் எல்லாம் கேவலமா பேசிட்டு போறான்.. இதில் இந்த பிரச்சனைகளும்..
இது எல்லாத்தையும் மீறி நான் ஏன் சென்ட்ரல் சிக்னலில் கதவு திறக்கிறேன் என்றால் நீங்களும் ஊழியர் நானும் ஊழியர்.. வேலைக்கு செல்பவர்கள் கஷ்டம் வேலைக்கு செல்பவர்களுக்கு தான் தெரியும்..அதனால தான் காலை கதவு திறக்கிறோம்..மாலை நீங்கள் எல்லாரும் வீட்டுக்கு தான் செல்கிறீர்கள் பாதுகாப்பாக சென்றால் போதும் என்று தோணும்... அதை மீறியும் சில சமயம் திறக்கிறோம் என்றார்
நீங்களாவது காலை 10 மணி மாலை 7 மணி வரை வேலைக்கு செல்கிறீர்கள்.. ஆனா நாங்க காலை 4 மணி டியூட்டிக்கு 2 மணிக்கே எழுந்து ரெடி ஆகிறோம் .. மாலை 6 மணிக்கு வர வேண்டிய பேருந்து டிராபிக் இல் 8 மணிக்கு வருகிறது இப்போ நீங்க வந்து இறங்கிய பேருந்து டிராபிக் இல் 2 மணி நேரம் தாமதம் .. இதெல்லாம் கணக்கில் வராது..
இந்த எல்லா கோபத்தையும் எதுக்குமே சம்மந்தமே இல்லாம வீட்ல சின்ன சின்ன விஷயத்துக்கெல்லாம் பெருசா ரியாக்ட் பண்றோம்.. என்றார் புன்னகை கலந்த வருத்தத்தோடு ..
சக்தி: ஒரு கேள்விக்கு பின்னர் இவ்வளவு பதில் இருக்கும் என்று எதிர்பார்க்கவில்லை.. எனது தரப்பில் நியாமா தோன்றியதால் தான் இந்த கேள்வியை எழுப்பினேன்.. மேலோட்டமான கேள்வி என்று நினைத்தால் மன்னிக்கவும் என்றேன்..
அன்பு: அட வாங்க மேடம், டி குடித்துட்டு போங்க என்றார்.
சக்தி: இந்த ரூட் தான்.. நேரம் ஆகி விட்டதால் மற்றொரு நாள் கண்டிப்பாக என்று கூறி அன்பு, ஆறுமுகம் இருவரிடமும் விடை பெற்றேன்..
இதை எழுதிய எனது அன்பு தோழிக்கு வாழ்த்துக்கள்...உங்களது உரையாடல் என்னை யோசிக்க வைத்துள்ளது... நன்றி! பேருந்து பயணம் தொடர வாழ்த்துக்கள்....
ReplyDeleteஎப்டீங்க இவ்ளோ நீண்ட உரையாடல் எப்டி இப்டிலாம்...
ReplyDeleteஅய்யோ...
வணக்கங்களும் வாழ்த்துக்களும்
நன்றி :)
Delete