The Power of RTI (Right to Information act) - இதுதான் தகவல் பெறும் உரிமைச்சட்டம் - Kutram Kadithal Movie
குற்றம் கடிதல் திரைப்படம் - நல்ல படம் பார்த்த நிறைவு - எல்லாரும் பாருங்க உங்களுக்கு பிடிக்கும்.
குற்றம் கடிதல் திரைப்படம் - அடித்த ஆசிரியை, மயங்கிய சிறுவன் - தோழா அந்த ஆசிரியை மேல் போட்ட கேஸ் வாபஸ் வாங்கிக்கலாம். ஆனால்,
ஆனால் RTI file பண்ணலாம் ..
RTI என்றால் என்ன ?
RTI (right to information act) -
RTI தகவல் பெறும் உரிமைச்சட்டம் சிறப்பு பயிற்சி முகாம்
10 நாட்களுக்கு முன்பு சனிக்கிழமை அன்று 4 pm to 7 pm சென்னை parrys கும்பத் காம்ப்ளெக்ஸ் இல் நடைபெற்றது, கட்டணம் ஏதும் இல்லை. நமக்கான உரிமையை எவ்வாறு எழுத்து
வடிவம் மூலம் விண்ணப்பித்து அரசாங்கத்திடம் பெறவேண்டும் என்பதை அய்யா பாலசுப்ரமணியன்
(https://www.facebook.com/BalasubramaniE?fref=ts)
அவர்கள் விரிவாக விளக்கியதோடு மட்டுமில்லாமல் விண்ணப்பம்
எழுதவும் பயிற்சி அளித்தார்.
RTI சிறப்பு பயிற்சி முகாம் வரும் போது நோட்டுபுத்தகம், பேனா எடுத்துவரவும். என்று facebook பதிவில் சொல்லி இருந்தார்கள். சிறிது தாமதமாகிவிட்டது. 5pm மணி அளவில் தான் செல்ல நேர்ந்தது. காலதாமதமாக சென்றதால் முதல் 5 நிமிடங்கள் வக்கீல் துறையில் இருப்பவர்களுக்கு இந்த முகாம் என்று நினைத்தேன்.பிறகு அய்யா பாலசுப்ரமணியன் அவர்கள் எல்லாருக்காகவும் தான், இதை எல்லாரும் தெரிந்து கொள்ளவேண்டும்என்பதை விரிவாக விளக்கினார்கள். பிறகு சுகாதார துறைக்கு விண்ணப்பம் எழுத பயிற்சி அளித்தார்..
கிளை நூலககங்களின் நிலை பற்றி தெரிவதற்கு RTI மூலம் தெரிந்துகொள்ளலாமா ? எனது கேள்விக்கு எவ்வாறு விண்ணபிக்க
வேண்டும் என்று விளக்கமளித்தார்.
ஏன் RTI ? எதற்கு RTI
? முதலில் RTI என்றால் என்ன ?
லஞ்சம் தந்து சில தேவைகளை பூர்த்தி செய்வோம். எதற்கு நமக்கான உரிமைகளுக்கு ஏன்
?
எனக்கான உனக்கான நமக்கான உரிமைகள், தகவல்கள், சலுகைகளை உரிய வகையில்
பெற விண்ணப்பம் செய்ய வேண்டும், மனு எழுத வேண்டும் யாருக்கு, எவ்வாறு என்பதை அய்யா அவர்கள் விரிவாக எங்களக்கு
அன்று சொல்லி கொடுத்தார்கள்..
எடுத்துக்காட்டு : 7ம், 8ம் வகுப்பில்
எழுதுவோமே எங்கள் தெருவிற்கு குடிநீர் வேண்டி,
டெங்கு காய்ச்சலை வரமால் தடுக்க,
அதன் முகவரியில் எழுதி இருப்போம் அல்லவா, பெறுநர் மாவட்ட ஆட்சியாளர், அதே மாதிரி தான்...
பள்ளியில் படிக்கும் போது தான் நம்ம ஏன்
யாருக்கு இந்த கடிதம் எழுதுகிறோம்,
இந்த முகவரியில் இந்த கடிதத்தை
அனுப்பி வைத்தால் என்ன ஆகும் என்று அப்பொழுது யோசிக்கவில்லை .
இச்சட்டத்தின் மூலம் யார் யார் எதை, எவ்வாறு, கேட்கலாம் என்பதை
அய்யா அவர்கள் விண்ணப்பிக்கும் முறையோடு சொல்லி
கொடுத்தார்கள்...
உரிமைகள்
வேலைவாய்பு (employement) ஆபீஸ் இல் பதிவு செய்திருப்போம்,
வருடங்கள் சென்று இருக்கும், ஆனால் ஒரு தொலைபேசி அழைப்பு கூட இதுவரைக்கும் வரவில்லை ஏன் ? கேட்கலாம், எனக்காக
என்ன செய்தீர்கள் ? நான் உங்களிடம் பதிவு செய்ததற்கு எந்தெந்த அலுவலகத்திற்கு என்னை refer செய்திருக்கீறீர்கள் அதற்கான
டாகுமென்ட் இன் நகல் வேண்டும் என கேட்கலாம்.
தகவல்கள்
டெங்கு காய்ச்சலுக்க அரசாங்கம் என்ன செய்துள்ளது ( தேதி முதல் தேதி வரை )
டெங்கு காய்ச்சலால் பாதிக்கபட்டவர்கள் எண்ணிக்கை
டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டு இறந்தவர்கள் எண்ணிக்கை
டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டு இறந்தவர்களின்
விவரம்
டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டு இறந்தவர்களுக்கான
நிவாரண நிதி அரசாங்கம் அளித்த விவரம்
இந்த தகல்வல்களை RTI மனுவின் மூலமாக பெற்றுகொள்ளலாம்
சலுகைகள்
கல்வி உதவித்தொகை
கல்விக்கடன்
விவசாயக்கூலி
ஊனமுற்றவர்களுக்கு உதவிப்பணம்
Etc ......
பொதுவாக RTI பற்றி பதிவு போடுவதால் இந்த பதிவு எல்லாருக்கும் புரியுமா நான் சொல்லவந்ததை
சரியாக புரியும் படியாக சொல்லுவேனா என்ற சிந்தனை இருந்து கொண்டே இருந்தது..
ஒரு முகாம் தான் கலந்து கொண்டேன், அதுவும் முழுவதுமாக அல்ல, இதை வைத்து என்னவென்று எழுதுவது மேலும் அடுத்தடுத்த பயிற்சியில் கலந்து கொண்டுவேண்டுமானால்
எழுதலாம் என்றே சிந்தனை இருந்தது, எழுதுவதற்கு முன்
யோசித்து சிறப்பு பயிற்சி முகாமில் கலந்து கொண்டு அதற்கான புத்தகம் வாங்கி படிக்க ஆரம்பித்ததும்
facebook இல் RTI book reading பதிவு போட்டேன். நண்பர் ஒருவர் அந்த பதிவில்
RTI பற்றி கேட்டு இருந்தார் அடுத்த பதிவில் சொல்கிறேன் என்றேன். எப்படி எழுதுவது, எழுதினாலும் அது நானே
கேள்வி கேட்டு நானே விடை சொல்லி இதை நான் ஏன் உங்களக்கு சொல்கிறேன் என்ற ஒரு கேள்வி
உங்களக்குள் வரும். இதை எழுதும் முன் நண்பர்களிடம்,
தெரிந்தவர்களிடம் சொல்லி இந்த மாதிரிலாம் இருக்கு என்றதும்,
அவர்கள் இதை நோக்கும் விதத்தில் கதை கேட்கும் போக்கு இருப்பதை கவனிக்க முடிந்தது
குற்றம் கடிதல் திரைப்படம் - RTI
File பண்ணனும் தோழா, தமிழ் நாட்டில் எத்தனை பள்ளியில் இன்னும் டீச்சர்
பிள்ளைங்கள அடிக்கிறாங்க, அதனால பசங்க எத்தனை பேரு பாதிக்கபடறாங்க. அரசாங்கம்
இதுக்காக என்ன நடவடிக்கை எடுக்கிறாங்க, எத்தனை குழந்தைகளுக்கு நிவாரணம் கொடுத்திருக்காங்க
?
ஆனால் RTI பற்றி எனக்கு தெரிந்த
சிலவற்றை வைத்து மட்டும் எழுதும் போது இதை பற்றி ஒரே கோணத்தில் பார்க்கும்படியா இருக்குமே
என்று நினைத்தேன். குற்றம் கடிதல் திரைப்படம் பார்த்த பின் இருந்த சிறு தயக்கமும் பிறகு
இல்லை.
குற்றம் கடிதல் திரைப்படம் எல்லாரும் பார்க்க வேண்டிய திரைப்படம்... IMDB Rating (9/10)
மேலும் RTI பற்றி தெரிந்து கொள்ள
கிழே உள்ள லிங்க் ஐ கிளிக் செய்யவும்
surukamana thelivana pathivu sakthi
ReplyDeletevery nice blog .we also provide information about RTI and how to file RTI .
ReplyDeleteRTI Online , File RTI,