நலம் வாழ எந்நாளும் என் வாழ்த்துகள், பிரார்த்தனைகள் அஜித் சார்
எனக்கு பிடித்த மனிதர் அஜித்குமார்
என் லுக், நடிப்பு மட்டும் பார்க்கமால் என் கேரக்டர் பிடித்து என்னை பிடிக்கும் என்று சொன்னால் அதில் அர்த்தம் இருக்கும் என்று சொன்ன அந்த கணம் அவரின் பேச்சு ஈர்த்தது .. ம்.. அதான் உண்மை .
அந்த நடிகரா ரொம்ப வெளிப்படையா பேசுவாரு, திமிர் பிடித்தவர் என்று ஒரு கால கட்டத்தில் பேசிய நபர்களும், பிரபலங்களும், பத்திரைகளும் இன்று அவரை தலையில் வைத்து கொண்டாடுகிறார்கள்... ஏன் ?
சிலர் அவரின் நல்ல குணங்களை கண்டு மாறி இருக்கலாம், அவரின் வெளிப்படையான பேச்சிலும், உள்ளொன்று வைத்து புறமொன்று பேசாதது, அவரின் உண்மையின் சக்தியை கண்டு வியந்து மாறி இருக்கலாம் .
ஆனால் சிலரும், இவரை பிடிக்கும் என்று கூறுவது அவர்களை பிரபலமாக்கும் பணிகளுக்காகவே, சினி துறையில்.
அதுவும் வாரம் ஒரு முறை, மாதம் இருமுறை வெளி வரும் பத்திரிக்கைகளும், புத்தகங்களும் சமுகவலைதள பத்திரிக்கை, வலை பக்கங்களும் அஜித் என்ற பெயரை பயன்படுத்துவது பிரபலமாக்குவதர்காகவும், புகழ்ச்சிக்காகவும், நம்பிக்கைகாகவும், .. என்பது மறுக்க முடியாத உண்மை.
சமுகவலைதளம் ஒன்று (பெயர் சொல்ல விரும்ப வில்லை ) .. பெரும்பாலும் அஜித் என்கிற பெயரையும் தலைப்பாக வைக்கிறார்கள் .ஏன் இது போன்ற டைட்டில் என்று உள்ளே படித்து பார்த்தால் தலைபிற்கும் செய்திக்கும் சம்மந்தமே இல்லை என்று தோன்றுகிறது ...
இந்த நடிகரை புகழ்ந்தால் நம்மையும் சேர்த்து இவரது ரசிகர்களே நம்மை facebook twiiter போன்றவற்றில் நம்மை பிரபலமாகிவிடுவார்கள்... என்று தான் சிலரின் பேச்சு இருக்கிறது ...
அஜித்தின் ரசிகர்களாகிய நமக்கும், பிரபலமாகுவதர்காக பொய்யா புகழ்பவர்களுக்கும் வித்தியாசம் இருக்கிறது.. அது போன்றவர்களிடம் இருந்து விலகி இருப்பது நல்லது நமக்கு..
மதிப்பிற்குரிய, பெருமைக்குரிய, அழகான மனிதர் ...அதனால் நாம் நமது அன்பை சமுக வலை தளங்கங்களில் அவரை பற்றிய பதிவை ஷேர், லைக் செய்கிறோம் ஐ லைக் அஜித், தல ரசிகர்கள், அஜித்குமார் ரசிகர்கள் என்று ...
அவரை வைத்து நாம் பெருமித பட்டு கொண்டு இருக்கிறோம் ஆனால் என்று என் ரசிகர்கள் என் மதிப்பிற்குரியவர்கள் என்று அவர் பெருமித படும் அளவு நடக்கும் என்று தெரியவில்லை.
அஜித்குமார் பேட்டி (1996) வியக்கவைத்த அவரின் பேச்சு
நாம் உண்மையாக ஒருவரை நேசிக்கிறோம், மதிக்கிறோம், புகழ்கிறோம் என்றால் அவர்கள் சொல்லும் சொல்லை மதிக்க வேண்டும், அவர்களை பின் பற்ற வேண்டும் என்பதில் தவறில்லை என்று தோன்றுகிறது.
எண்ணிலடங்காத ரசிகர்கள் நிரந்தரமாகவே அவரை நேசிக்கிறார்கள். அவற்றில் ஒருவராக நானும் இருப்பதில் பெருமையடைகிறேன்.
ஒரு நல்ல மனிதன் நல்ல நடிகன் ஆகலாம், ஆனா ஒரு நல்ல நடிகன் நல்ல மனிதனாகினான் என்றால் அது அஜித்தான்...
ஆனந்த விகடனுக்கு அளித்த பேட்டியொன்றில் "உங்க தன்மானத்தை யாருக்காவது விட்டுக்குடுக்காதீங்க, உங்க வேலையை நூறு சதவீதம் ரசித்து செய்யுங்கள்....நல்லா படியுங்கள்...யாரையும் கண்மூடித்தனமாய் நம்பாதீர்கள், யார் பின்னாலும் போகாதீர்கள்..மற்றவன் காலை மிதித்து முன்னேறாதீர்கள்.. சிம்பிளா சொல்றேன்.. வாழு வாழவிடு.
அஜித்குமார் அனுபவம்
கடுமையாக உழைக்க வேண்டும், நாணயமாக வரி கட்ட வேண்டும், மூத்தவர்களை மதித்து நடக்க வேண்டும். மூத்தவர்களுடன் நிறைய நேரம் செலவிட வேண்டும். வருமானத்தின் ஒருபகுதியை இயலாதவர்களுக்கும், இல்லாதவர்களுக்கும் கொடுக்க வேண்டும். அடுத்தவர் வாழ்வில் உன் கருத்தை திணிக்ககூடாது. உன் வாழ்வில் அடுத்தவர் கருத்தை திணிக்க அனுமதிக்ககூடாது. நீ யாருடன் பழக வேண்டும், பணி செய்ய வேண்டும் என்பதை பணம் தீர்மானிக்க கூடாது, உன் மனம் தீர்மானிக்க வேண்டும். வாழு வாழவிடு. இது என் அறிவுரை அல்ல அனுபவம்"
இதனை நிமிடத்திற்குள் லைக் வரவேண்டும், மற்ற நடிகர்களை அசிங்கபடுத்தி நம்மை போற்றுவதோ அல்ல .. படம் வரும் நேரம் பாலபிஷேகம் செய்வதோ அல்ல.. அவர் விரும்புவது முடிந்த அளவுக்கு நேர்மையாகவும், உண்மையாகவும், இருப்பதும், மற்றவர்களுக்கு நற்பணி செய்வதே ... என்னால் முடிந்த வரை அவரின் வார்த்தைகளுக்கு மதிப்பளிப்பதோடு மட்டுமில்லாமல் அதை செயல் முறையாகவும் செய்ய முயல்வேன்...
நமக்கு பிடிச்சவங்களுக்காக அவர்களின் புகைப்படம், அவர்களை பற்றிய பதிவுகளை ஷேர் லைக் செய்வது மட்டுமில்லை, அவங்களுக்கு பிடித்த விஷயங்களையும் நாம் செய்யும் போது தான் அவர்களை பிடித்திருகிறது என்று வார்த்தைக்கு அர்த்தம் வருகிறது... வெறும் போற்றுவதால் அல்ல...
ரஜினிகாந்த் அவர்களின் பரிசு அஜித்குமார் அவர்களுக்கு ..
Living masters in himalaya - Swami Rama (இமயத்து ஆசான்கள் - சுவாமி ராமா) இந்த புத்தகத்தை தான் ரஜினிகாந்த் அவர்கள் அஜித்குமார் அவர்களுக்கு பரிசாக கொடுத்தார்கள்... ஆன்மீக சம்மந்த புத்தகம் என்றாலே எதோ ஒரு சிலருக்கு தான் என்று பலர் ஒதுக்கி விடுகிறார்கள் ... புத்தகம் படித்தேன் , படித்ததில் பிடித்தது .. முடிந்தால் அனைவரும் படிக்கவும் ...
அவரின் லுக், ஸ்டைல், அதுக்கும் மேல எனக்கு அவர் கேரக்டர் பிடிக்குமுங்க.. அவரின் நல்ல குணங்களை, அறிவுரைகளை, போற்றுவதோடு மட்டுமில்லாமல் செஞ்சு தான் பின்பற்றி பார்ப்போமே..
நமக்கு பிடிச்சவங்களுக்காக செய்யாம வேற யாருக்காக செய்ய போறோம் அப்படி செய்யும் போது சலிப்பில்லை, வரும் மகிழ்ச்சிக்கு அளவில்லை.
nice
ReplyDeleteLots of new things about thala really nice
ReplyDelete