கன்னிமரா நூலகத்தில் எப்போதும் கதை புத்தகம் தான் எடுப்பேன் ஒரு மாறுதலுக்கு அன்று யாரோ படித்து வைத்த புத்தகத்தை எதர்ச்சியாக எடுத்து சென்றேன் "மீட்டாத வீணை - பாலகுமாரன், இனிது இனிது காதல் இனிது - பாலகுமாரன்" வியந்து போனதும் பிரமித்து போனதும் சந்தோஷ பட்டதும் கண்ணீர் சிந்தியதும் ரசித்ததும் ரசித்த எழுத்தை கற்பனை செய்ததும் இதை தவிர பிடித்திருகிறது என்ற வார்த்தைக்கு அர்த்தம் தெரிந்து கொண்ட நேரம் நான் புத்தகம் முடித்த தருணம்... இனி இது போல் தருணம் கிடைக்குமா என்று நினைத்து பாலகுமாரன் ஐயா வினுடைய புத்தகங்கள் படிக்க ஆரம்பித்தேன் ஒவ்வொரு புத்தகம் படித்தததும் அதே தருணம் தான்... மிகவும் மகிச்சியாய் இருக்கிறது...
வானமே எல்லை - பாலச்சந்தர் 5 இளைஞர்கள் (3 ஆண்கள், 2 பெண்கள்) வாழ்க்கையின் (குடும்பம், சமூகம்) மீது ஏற்படும் விரக்தி காரணமாக அந்த சூழ்நிலையை விட்டு விலக, வெறுக்க, தப்பிக்க தனியே வீட்டை விட்டு வருவார்கள், வருகின்ற சூழ்நிலைக்கு தள்ளப்படுவார்கள். ஒரு குறிப்பிட்ட நேரத்தில் 5 பெரும் ஒன்றாக சந்திக்க பிரச்சனை வேறே தவிர, ஆனால் அவர்களுக்கு இழைக்கப்பட்ட துரோகம் ஒன்று தான் என்று தெரிய வரும் போது அவர்கள் சேர்ந்து ஒரு முடிவு எடுப்பார்கள்.. ஒரு குறிப்பிட்ட நாள் வரை நாம் அனைவரும் அவரவர் விருப்பம் போல் மகிழ்ச்சியாக இருப்போம் . பிறகு அனைவரும் தற்கொலை செய்து கொள்வோம் என முடிவு எடுப்பார்கள்.. அவர்கள் மரணத்திற்காக தேர்ந்தெடுத்த நாள் வரை மகிழ்ச்சியாக ஆண், பெண் பாகுபாடின்றி நண்பர்களாக அவரவருக்கு விருப்பமான விஷயங்களை சொல்லி அதை செயல்படுத்தி மகிழ்ச்சியாக இருப்பார்கள். நடுவில் ஒருவர் காணமால் போக என்ன நடந்தது, அவர்கள் எடுத்த முடிவு நிறைவேறியதா? இல்லையா ? என படம் விறுவிறுப்பாக எதிர்பாக்காத இறுதி காட்சியை நோக்கி செல்லும் விதம் நன்று. ஒரு சமூகம், குடும்பம் எப்ப...
Comments
Post a Comment