சமிப காலமாக நகை கடை விளம்பரங்களை அதிகமாக பார்க்க நேரிடுகிறது, எல்லா சேனல்களிலும் நகை கடை விளம்பரங்கள் என்றாலே உங்கள் பெண்களுக்கு நகை வாங்கி விட்டீர்களா இல்லையா ? கல்யாணமே நடக்காது என்பது போல் தான் இருக்கிறது .
விளம்பரம் 1
"மாப்பிள்ளையே அப்படியே வெயிட் பண்ண சொல்லுங்க இதோ வந்துடறேன், அதான் நம்ப கடை இருக்கே அதான் அதே தான் அந்த நகை கடை இருக்கே என்று"
விளம்பரம் 2
"பெண், பெண்கள் என்றாலே டென்ஷன் ல என்று ஆரம்பித்து .பெண்கள் டென்ஷன் இல்லை அவர்களுக்கு நகை சேர்ப்பதில் தான் டென்ஷன் என்று சொல்லி கவலை படாதீங்க, கல்யாண வயதில் பெண்கள் இருக்கா கவலை வேண்டாம். அந்த நகை கடையில் வட்டி இல்லை அது இல்லை இது இல்லை என்று சொல்றாங்க"
விளம்பரம் 3
"மற்றுமொரு விளம்பரம் ஒன்றில் அப்பா அம்மா அவர்களின் மகள் கோவிலுக்கு செல்வார்கள், உடனே மனைவி கணவரிடம் கூறுவார்கள் நம்ப பெண் யாரோ ஒரு பையன் கூட ஓடி போக போறா என்று, கணவர் கண்டு கொள்ளமாட்டார், மகள் கோவிலில் இருந்து வெளியே வந்தவுடன் காதலன் அழைப்பார் அந்த பெண் காதலனை முறைத்த படி பார்த்து அவர் தந்தையுடன் சென்று விடுவார். உடனே பிரபு அவரே தான் அதே நகை கடை தான், நம்பிக்கை, நம்பிக்கை தான் அப்படி என்று கூறி நகை கடை பெயரை கூறுவார்.
பெண் ஓடி போகாம இருபதற்கும் உங்க நகை கடைக்கும் என்ன ஒற்றுமை ? நம்பிக்கை ? ஏன் பெண்களுக்கு நகை சேர்கிறீங்க ? எதுக்கு வரதச்சனை தரீங்க. பெரும்பாலும் நகை கடை விளம்பரங்கள் இப்படிதான்.
பெண்களை வைத்திருப்பவர்கள் கூட இவ்வளவு கவலை படமாட்டார்கள் இவர்களுக்கு என்ன கவலையோ .. வரதச்சனை ஒழிந்த மாதிரி தான். பெற்றவர்கள் உதவியா இருக்கணும் என்று நினைத்தால் பணமா கூட தருவாங்க. நகை தான் வாங்குமா அதுவும் உங்க கடை நகை தான் வாங்கனுமா.. விளம்பரங்களை, விளம்பரதாரர்களை சொன்னேன்.
விளம்பரம் 4
மற்றொரு விளம்பரம் washing machine ..செம சிரிப்பு .. இப்போ என் கை வலிக்கவே இல்லை ஏன் ? என் கிட்ட ...... washing machine இருக்கே என்று husband and wife சேர்ந்து டான்ஸ் ஆடுவாங்க....கொடுமை, எத சொல்றீங்க . அதே தான் விளம்பரம் பார்த்தவங்களுக்கு தெரியும்...
தமிழ் திரைப்படங்கள் மட்டும் சலித்தவை அல்ல. ஹீரோ அவர் காதலிக்கும் பெண்ணிடம் பணம் எதிர்பார்க்க மாட்டார். நம் காதல் தான் பெரிது.. வரதச்சனை எதுவும் வேண்டாம் என்று கூறுவார் ஹீரோ இல்லையா ..
அனால் அதுவே அவர் சகோதரி என்று வரும் போது காதல் திருமணமாகட்டும் இவர்கள் பார்த்துவைத்த திருமணமாகட்டும், எப்படியாவது கடனாவது வாங்கி என் தங்கச்சிக்கு நீங்க கேட்டதெல்லாம் கொடுத்துடுறேன் பைக், நகை, மெயின் எக்ஸ்ட்ரா நிறைய. என் தங்கச்சிய மட்டும் பத்திரமா பாத்துகோங்க என்று. எவ்ளோ முரண்பாடு.
உங்க தங்கச்சிக்கும் உங்கள மாதிரி ஹீரோ மாதிரி நல்லவங்களா பாருங்க. உங்களக்கு சரி என்று படாத ஒன்றை எதுக்கு உங்க தங்கச்சிக்கு மட்டும் செய்றீங்க ?
உங்க தங்கச்சி காதலிக்கிறார்கள் என்றால் உண்மையான காதல் வரதச்சனை கொடுத்தால் தான் திருமணம் செய்வேன் என்று சொல்லாது. நீங்க தான் பாத்து கல்யாணம் பண்றீங்க என்றால் எதுக்கு வரதச்சனை கொடுத்தால் கல்யாணம் செய்வேன் என்று ஒருவரை பார்கிறீர்கள். சரி நீங்கள் உங்களக்கு ஒரு விதிமுறை உங்கள் சகோதரிக்கு ஒரு விதிமுறை என்றால் இதிலிருந்து என்னவென்று புரிந்து கொள்வது .
தமிழ் திரைப்படங்கள் இன்றளவும் சொல்லவருவது என்னவென்று தான் புரியவில்லை.
வாளுக்கும் தங்கத்திற்கும் வரலாற்றில் நடந்த யுத்தத்தை விவரிக்கிறது இந்த கவிதை.
'‘எல்லாம் என்னுடையது’’ என்றது தங்கம்.
‘‘எல்லாம் என்னுடையது’’ என்றது வாள்.
‘‘என்னால் எல்லாவற்றையும் வாங்க முடியும்’’ என்றது தங்கம்.
‘‘என்னால் எல்லாவற்றையும் பறிக்க முடியும்’’ என்றது வாள். - ரஷ்ய கவிஞர் புஷ்கின்
உண்மையாகஅனைவரும், இந்த விஷயத்தை பற்றி சிந்திக்க வேண்டும், புரட்சி நகை வாங்குவதற்கு தேவையில்லை, அந்த நகையை வரதட்சணை என்கிற பெயரில் விற்பதற்கு தான் தேவை.
ReplyDelete