Skip to main content

Posts

Happy Happy Birthday to My Dear Thala

நலம் வாழ எந்நாளும் என் வாழ்த்துகள், பிரார்த்தனைகள் அஜித் சார் எனக்கு பிடித்த மனிதர் அஜித்குமார்  என் லுக், நடிப்பு மட்டும் பார்க்கமால் என் கேரக்டர் பிடித்து என்னை பிடிக்கும் என்று சொன்னால் அதில் அர்த்தம் இருக்கும் என்று சொன்ன அந்த கணம் அவரின் பேச்சு ஈர்த்தது .. ம்.. அதான் உண்மை .  அந்த நடிகரா ரொம்ப வெளிப்படையா பேசுவாரு, திமிர் பிடித்தவர் என்று ஒரு கால கட்டத்தில் பேசிய நபர்களும், பிரபலங்களும், பத்திரைகளும் இன்று அவரை தலையில் வைத்து கொண்டாடுகிறார்கள்... ஏன் ?  சிலர் அவரின் நல்ல குணங்களை கண்டு மாறி இருக்கலாம், அவரின் வெளிப்படையான பேச்சிலும், உள்ளொன்று வைத்து புறமொன்று பேசாதது, அவரின் உண்மையின் சக்தியை கண்டு வியந்து மாறி இருக்கலாம் . ஆனால் சிலரும், இவரை பிடிக்கும் என்று கூறுவது அவர்களை பிரபலமாக்கும் பணிகளுக்காகவே, சினி துறையில். அதுவும் வாரம் ஒரு முறை, மாதம் இருமுறை வெளி வரும் பத்திரிக்கைகளும், புத்தகங்களும் சமுகவலைதள பத்திரிக்கை, வலை பக்கங்களும் அஜித் என்ற பெயரை பயன்படுத்துவது பிரபலமாக்குவதர்காகவும், புகழ்ச்சிக்காகவும், நம்பிக்கைகாகவும்...

இதயம் இருந்தும் இல்லாமலும் நாம் - Heartful and Heartless, We

இதயம் இருந்தும் இல்லாமலும் நாம் இறைவன் கொடுத்ததை இருக்கும் போதும் (ரத்த தானம் ) இறந்த பிறகும் (கண் கடமை) இன்னொருவருக்கு கொடுப்பது நலமே கண் கடமை செய்வீர்  இருக்கும் போது கொடுப்பதே தானம் இறந்த பின் கொடுப்பது கடமை கண்களை கொடுப்பீர் கடமையை செய்வீர் பணம் போதும் விலை உள்ள பொருள்களை நேசிக்க மனம் வேண்டும் விலையில்லா உயிர்களை நேசிக்க நல்ல மனம் கொண்டுள்ள நண்பர்களுக்காக சக்தி எழுதிகொள்வது செய்த பிறகே சொல்கிறேன் கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்க் இல் விவரங்களை பூர்த்தி செய்து அனுப்பினால் கண் தானம் செய்ததற்கான கார்டு  அனுப்புவார்கள்.... http://www.sankaranethralaya.org/eye-pledge.html

Memorable Moment in My Life - Sakthi

கன்னிமரா நூலகத்தில் எப்போதும் கதை புத்தகம் தான் எடுப்பேன்  ஒரு  மாறுதலுக்கு அன்று   யாரோ படித்து வைத்த புத்தகத்தை எதர்ச்சியாக எடுத்து சென்றேன் "மீட்டாத வீணை - பாலகுமாரன், இனிது இனிது காதல் இனிது - பாலகுமாரன்"  வியந்து போனதும் பிரமித்து போனதும் சந்தோஷ பட்டதும் கண்ணீர் சிந்தியதும்  ரசித்ததும் ரசித்த எழுத்தை கற்பனை செய்ததும் இதை தவிர பிடித்திருகிறது என்ற வார்த்தைக்கு அர்த்தம் தெரிந்து கொண்ட நேரம் நான் புத்தகம் முடித்த தருணம்... இனி இது போல் தருணம் கிடைக்குமா என்று நினைத்து  பாலகுமாரன் ஐயா வினுடைய புத்தகங்கள் படிக்க ஆரம்பித்தேன் ஒவ்வொரு  புத்தகம் படித்தததும் அதே தருணம் தான்... மிகவும் மகிச்சியாய் இருக்கிறது... 

Ajith’s Special Interview For His Fans – Ananda Vikatan

கற்றுக் கொண்டால் குற்றமில்லை - தியானம் செய்யுங்கள்

தோழனே! தியானம் என்பது மந்திரமல்ல, ஒரு மதத்தின் கோட்பாடும் இல்லை. யாரோ பொழுது போகாதவர்களின் வேலையும் அல்ல. இது சும்மா இருத்தலின் ஆரம்ப நிலை. சும்மா இருத்தல் என்பது சோம்பி இருத்தல் அல்ல. எந்த செயலும் செய்யாது ஏதோ கற்பனையில் மூழ்கி இருத்தலும் அல்ல. ஒரு விஷயத்தை விருப்பு வெறுப்பின்றி பார்த்தலே சும்மா இருத்தல். இது துறவிகளுக்கான விஷயமல்லவா என்று கேள்வி வரும். எல்லோருக்கும் தேவைப்படும் நிலை அது. எவரெல்லாம் வெற்றி பெற விரும்புகிறாரோ, அவருக்கு உண்டான ஆதார சக்தி இது. எவரால் சும்மா இருக்க முடிகிறதோ, அதாவது எவரால் ஒரு விஷயத்தை விருப்பு வெறுப்பின்றி பார்க்க முடிகிறதோ, அவர் அந்த விஷயத்தை தெளிவாக புரிந்து கொள்ள முடியும். ‘தியானம் பண்ணா பக்கத்து வீட்டு விஷயம் பளிச்சுன்னு சினிமா மாதிரி தெரியுமா?’ பேராசை இது. விருப்பு தலை விரித்தாடும் புத்தி இது. அடுத்த வீட்டை ஏன் பார்க்க வேண்டும் என்கிற கேள்வி தனக்குள் இல்லாத ஆவல் இது, உன் வீட்டை பார். உன்னை உற்றுப்பார், உன்னிலிருந்து துவங்கு. தன்னையே விருப்பு வெறுப்பின்றி பார்ப்பவருக்கு அடுத்த வீடு பற்றி அதிக அக்கறை இல்லாது போகும். அங்கே யார் என்ன பேசுகின்றார்...