Skip to main content

Posts

Showing posts from 2014

இதயம் இருந்தும் இல்லாமலும் நாம் - Heartful and Heartless, We

இதயம் இருந்தும் இல்லாமலும் நாம் இறைவன் கொடுத்ததை இருக்கும் போதும் (ரத்த தானம் ) இறந்த பிறகும் (கண் கடமை) இன்னொருவருக்கு கொடுப்பது நலமே கண் கடமை செய்வீர்  இருக்கும் போது கொடுப்பதே தானம் இறந்த பின் கொடுப்பது கடமை கண்களை கொடுப்பீர் கடமையை செய்வீர் பணம் போதும் விலை உள்ள பொருள்களை நேசிக்க மனம் வேண்டும் விலையில்லா உயிர்களை நேசிக்க நல்ல மனம் கொண்டுள்ள நண்பர்களுக்காக சக்தி எழுதிகொள்வது செய்த பிறகே சொல்கிறேன் கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்க் இல் விவரங்களை பூர்த்தி செய்து அனுப்பினால் கண் தானம் செய்ததற்கான கார்டு  அனுப்புவார்கள்.... http://www.sankaranethralaya.org/eye-pledge.html

Memorable Moment in My Life - Sakthi

கன்னிமரா நூலகத்தில் எப்போதும் கதை புத்தகம் தான் எடுப்பேன்  ஒரு  மாறுதலுக்கு அன்று   யாரோ படித்து வைத்த புத்தகத்தை எதர்ச்சியாக எடுத்து சென்றேன் "மீட்டாத வீணை - பாலகுமாரன், இனிது இனிது காதல் இனிது - பாலகுமாரன்"  வியந்து போனதும் பிரமித்து போனதும் சந்தோஷ பட்டதும் கண்ணீர் சிந்தியதும்  ரசித்ததும் ரசித்த எழுத்தை கற்பனை செய்ததும் இதை தவிர பிடித்திருகிறது என்ற வார்த்தைக்கு அர்த்தம் தெரிந்து கொண்ட நேரம் நான் புத்தகம் முடித்த தருணம்... இனி இது போல் தருணம் கிடைக்குமா என்று நினைத்து  பாலகுமாரன் ஐயா வினுடைய புத்தகங்கள் படிக்க ஆரம்பித்தேன் ஒவ்வொரு  புத்தகம் படித்தததும் அதே தருணம் தான்... மிகவும் மகிச்சியாய் இருக்கிறது...