கன்னிமரா நூலகத்தில் எப்போதும் கதை புத்தகம் தான் எடுப்பேன் ஒரு மாறுதலுக்கு அன்று யாரோ படித்து வைத்த புத்தகத்தை எதர்ச்சியாக எடுத்து சென்றேன் "மீட்டாத வீணை - பாலகுமாரன், இனிது இனிது காதல் இனிது - பாலகுமாரன்" வியந்து போனதும் பிரமித்து போனதும் சந்தோஷ பட்டதும் கண்ணீர் சிந்தியதும் ரசித்ததும் ரசித்த எழுத்தை கற்பனை செய்ததும் இதை தவிர பிடித்திருகிறது என்ற வார்த்தைக்கு அர்த்தம் தெரிந்து கொண்ட நேரம் நான் புத்தகம் முடித்த தருணம்... இனி இது போல் தருணம் கிடைக்குமா என்று நினைத்து பாலகுமாரன் ஐயா வினுடைய புத்தகங்கள் படிக்க ஆரம்பித்தேன் ஒவ்வொரு புத்தகம் படித்தததும் அதே தருணம் தான்... மிகவும் மகிச்சியாய் இருக்கிறது...
புத்தக வாசிப்பு, மழை, இசை இவற்றுடன் கலந்தவள்.